;
Athirady Tamil News

லண்டனில் தமிழருக்கு கிடைத்த பெருமை !!!

0

லண்டனில் தெமிழ்நாடு சென்னையை சேர்ந்த தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவராவார்.

இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தொழிலாளர் கட்சியில் உறுப்பினர் ஆனார்.

அதன் மூலம் 2018 ஆம் ஆண்டு Kenley Ward இல் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி மீண்டும் அயராத உழைப்பு, உண்மை, உறுதியான முடிவு, தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள பற்று, விடாமுயற்சியால் 2022 இல் மீண்டும் தொழிலாளர் கட்சியின் சார்பாக Norbury Park என்ற Ward இல் போட்டியிட்டு கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் குராய்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர் 17/05/2023 அன்று குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அஇஅதிமுக மகளிர் அணி தென் சென்னை மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மறைந்த சரோஜினி சீனிவாசனின் மகனாவார்.

இவர் புலம்பெயர்ந்த இங்கிலாந்து நாட்டில் தமிழ் மொழி, கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார்.

அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த உயரிய பதவி தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாக நினைத்து தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், குருகிருஷ்ணா என்ற மகனும் இருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.