கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைக்கு அதிக தேவை !!
கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தை நிரப்ப ஆட்கள் தேவைப்படுவதுடன், மற்ற பணிகளை செய்ய சுமார் 24,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
Rehan Khan, பிள்ளைகளுடைய கல்விக்காக, 2018ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.
விவசாயத்தில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவரான Khan, வேளாண்மைத் தொழிலில் உள்ள பிரச்சினைகளையும் விவரிக்கிறார்.
முதல் விடயம் நிலம் வாங்குவது. Khan வந்த நேரத்தில் நிலம் வாங்க கஷ்டப்பட்டிருக்கிறார். அத்துடன், விவசாயம் செய்வதற்கு தேவையான ட்ராக்டர் முதலான இயந்திரங்கள் கிடைப்பது பிரச்சினையாக இருந்திருக்கிறது.
அத்துடன், விதை எங்கு வாங்குவது, விளைச்சலை எங்கு விற்பனை செய்வது என பல பிரச்சினைகள் உள்ளன. ஆக, அரசு வெறுமனே புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதற்கான வழிமுறைகளை செய்வதோடு நிறுத்திவிடாமல், இதுபோன்ற உதவிகளையும் அரசு செய்யுமானால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.
இந்நிலையில், உள்ளூரில் விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காததால், Steven Donald போன்றவர்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.
தகுதியுடையோர் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்