;
Athirady Tamil News

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் கூரை திருத்த வேலையின் போது , கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கூரை திருத்த வேலைகளை, வேலையாட்களை கொண்டு, வீட்டின் உரிமையாளர் இன்றைய தினம் காலை…

அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா..!!

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம்…

சுவீடன் மன்னர், ராணிக்கு கொரோனா…!!

சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் குஸ்டாப் (வயது 75). ராணி சில்வியா (78). இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அரண்மனை சார்பில்…

யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம் – எம்.கே. சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால்,இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.…

யாழில் முதன் முதலாக இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு!!

யாழில் முதன் முதலாக இளங்கலை மாணவர் ஆய்வு மாநாடு எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ். பல்கலையில் ஆரம்பமாகிறது யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக…

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான சேவைக்கு தடை- ஹாங்காங் அறிவிப்பு..|!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 8…

அக்கிராசன உரை;கடிதம் எழுதினார் ரணில் !!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நாளன்று, ஜனாதிபதி ஆற்றும் அக்கிராசன உரை தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கையொன்றை…

வீடு தீக்கரை – பெண்கள் உட்பட எழுவர் கைது!!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 7 பேரை இன்று (06) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.…

யாழில் மோட்டார் சைக்கிள் – பட்டா ரக வாகனம் மோதி விபத்து!! (படங்கள்)

யாழில் மோட்டார் சைக்கிள் - பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் , இலுப்பையடி சந்தியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலாலி வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்துடன்,…

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிர்மாய்க்க முயற்சி!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ்…

யாழ்.போதனாவில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்றைய தினம்…

சம்பளம் அதிகரிப்புடன் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!!

51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும்…

கொழும்பு பகுதிக்கு 16 மணி நேர நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம்…

கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் கைது!!

பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விசேட…

மீண்டும் மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார…

மத்திய வங்கியின் ஆளுநரின் ட்விட்டர் பதிவு!!

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள வெளிநாட்டு பணத்தை வேறு நாணயமாக மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கியினால் வணிக வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித்…

4,545 பட்டதாரிகளுக்கு நியமனங்கள்!!

மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவுசெய்த 4,545 பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.…

சில மாவட்டங்களில் பல தடவைகள் இன்று மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்…

காணாமல் போகும் குழந்தைகள்.. காரணங்களும்.. கற்பனைகளும்!! (மருத்துவம்)

ஒரு குழந்தையின் முகம் வருந்திச் சிவப்பதை காண சகிக்காத மனதுதான் மனிதம். போற்றிப் பாதுகாக்க வேண்டிய குழந்தைமை என்னென்ன வகைகளில் சீரழிகிறது என அறிந்தால், தாங்கிக்கொள்ளவே முடியாது. அதிலும் குழந்தைகள் வன்கொடுமையில் உடல் ரீதியான கொடுமையே…

குண்டுகளை கடத்த முயற்சித்தவர்கள் கைது !!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்புக்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள். ஜனவரி 4ஆம் திகதியன்று…

IMF ஐ நாடினால் கட்டணங்கள் உயரும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை நாடினால் நாட்டில் எரிபொருள், மின்சாரம், நீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு முகங்கொடுக்க நேரிடும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தின் போது…

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்றார்!! (படங்கள்)

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார். அவருக்கு வவுனியா நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அமோக வரவேற்பளித்தனர். நீதிச் சேவையை வவுனியா மாவட்டத்தில்…

தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் – DR. ஆ.கேதீஸ்வரன்!!

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!! (படங்கள்)

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்: பொறுப்பதிகாரியின் விடுதி முன்னால் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள…

திருமறைக் கலாமன்றத்தின் நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பங்கள்…

திருமறைக் கலாமன்றத்தினால் , நடாத்தப்படும் நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடகக் கலையின் மேம்பாடு கருதி,செயல் முறை சார்ந்த தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப்…

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் உள்ளூராட்சி…

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள…

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…

யாழ். நகரப் பகுதியில் மலேரியாவை பரப்பும் ஒருவகை நுளம்பு கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது என வட மாகாண சுகாதார…

மாமனிதரின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

சட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலைவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவு நாள் இன்று (05.01.2022) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் மாலை…

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக , ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த…

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட - மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜனக் நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனடிப்படையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் தனிப்பட்ட உதவியாளராக…