;
Athirady Tamil News
Daily Archives

6 June 2024

கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்றில் கூறிய நபர்

கனடாவில் நபர் ஒருவர், கடவுளின் உத்தரவில் பெண்களை கொன்றதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நான்கு பெண்களை தொடர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெரமி ஸ்கிபிகி என்ற நபரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த…

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த மகள்கள் ; கவுரவக் கொலை செய்த தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்ததற்காக கவுரவக் கொலையாக இரு மகள்கள் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விஹாரி லாகூர் கிராமத்தை சேர்ந்த 20வயதுடைய இளம்பெண் கடந்த மாதம் வீட்டை…

ஜனநாயகத்தில் தேர்தல்களுக்கு ஏற்புடைய மாற்று எதுவுமில்லை

கலாநிதி ஜெகான் பெரேரா ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் அரசியலமைப்பு ரீதியான ஆணையின் பிரகாரம உள்ள ஐந்து வருட பதவிக்காலத்துக்கும் அப்பால் பதவியில் இருப்பதற்கான சகல தெரிவுகளையும் அரசாங்கத் தலைவர்கள் பரிசீலிக்கின்றார்கள் போன்று…

பாரதப் பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு (Narendra Modi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று (06) திறந்து வைத்துள்ளார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் ஊடாக…

எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் சேவைக்கு அரசாங்கம் அனுமதி

உலகின் முன்னனி செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு,…

கனடாவில் 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைப்பு

கனடாவின் Bank of Canada வங்கி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மார்ச் 2022-இல் பணவீக்கத்தை எதிர்த்து வட்டி விகிதம் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதல்முறையாக புதனக்கிழமை (மே 5) வட்டி விகிதங்கள்…

தேசிய பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்பப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாட்டின்…

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு

கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்…

பாவனைக்கு வந்த மன்னர் சார்லஸ் கரன்சி நோட்டுகள்!

பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் நேற்று முன் தினம் முதல் (4) மக்கள் பாவனைக்கு வந்துள்ளது. மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது. ராணி…

முதலையின் ஆக்ரோஷமான உணவு வேட்டை! சிலிர்க்க வைக்கும் காட்சி

தண்ணீருக்குள் அமைதியாக படுத்திருந்த முதலை ஒன்று ஆக்ரோஷமாக உணவை சாப்பிட வந்த காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு…

ஹமாஸை அழிக்கும் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பதிலடி

ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலின் திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின்(Joe Biden) முன்மொழிவு தொடர்பில் எதிர்ப்புக்கள்…

பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளை தாக்குவோம்: ரஷ்யா எச்சரிக்கை

பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளை தாக்குவோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் ராணுவத்தின் எந்த அதிகாரியும் உக்ரைனில் இருந்தால், நிச்சயம் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு…

மீன்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological Department) கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது. கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாத…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை குறைப்பு விபரம் இதன்படி ஒரு கிலோகிராம்…

விமல் வீரவன்சவிற்கு முக்கிய அமைச்சுப் பதவி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு(Wimal Weerawansa) முக்கிய அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியொன்றை…

10 ஆயிரம் ரூபா நிவாரணம்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. நிவாரணத் தொகை இதன்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்டு…

மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி : 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

நேருக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகிய பெருமையை பெற்ற நரேந்திர மோடிக்காக அரசு வைத்தியசாலையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் அணிவித்த பாஜக இந்தியாவில் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் மோடியின்…

ஜூன் 9-இல் மோடி பதவியேற்பு?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்தியில் புதிய…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஒரு பகுதியை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளதாக…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின்…

யாழ் உலவிக்குளம் பிள்ளையார் ஆலய உப தலைவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் கொத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் வேலைக்கு செல்வதற்காக இன்றைய தினம்…

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக்…

ரிஷி சுனக்கின் காரில் ஏறச்சென்ற டாம் குரூஸ்., வைரலாகும் காணொளி

லண்டனில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் (Tom Cruise) பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) காரில் ஏறச்சென்ற காணொளி வைரலாகிவருகிறது. நடிகர் டாம் குரூஸ் லண்டனில் உள்ள எட்மிஸ்டன் லண்டன் ஹெலிபோர்ட்டில் பிரித்தனைய பிரதமர் ரிஷி…

நெதன்யாகுவிற்கு எதிரான பிடியாணை : செனட்சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Netanyahu) எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத்…

இந்த நாட்டு புலம்பெயர்ந்தோர் விரைவாக நாடுகடத்தப்படுவார்கள்: ஜேர்மனி உள்துறை அமைச்சர்

ஜேர்மனியில் சமீபத்தில் ஆப்கன் நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஆகவே, நாட்டின் நலனுக்கு அச்சுறுத்தல் என கருதப்படும்…

யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில்…

நயினை அம்மன் கொடியேற்றம் நாளை

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி…

யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம்…

"பொது நிலைப்படும் - பொது வாக்கெடுப்பும்" நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மாலை 02.59 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து…

நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ். மாநகர சபையிடம் கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…

கனடா அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி – ஒருவர் கைது

கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்று தருவதாக இளைஞன் ஒருவரிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

மீண்டும் சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்: லெபனானில் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்

தெற்கு லெபனானில் (Lebanon) இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் (Israel) படையினருக்கும்…

சிதைக்கப்பட்ட பா.ஜ.கவின் அரசியல் நகர்வு: ஸ்டாலின் வகுக்கும் புதிய திட்டம்

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு (N. Chandrababu Naidu) நாயுடுவை தி.மு.கவின தலைவரும் தமிழக முதலமைச்சருமான எம். கே. ஸ்டாலின் (M. K. Stalin) சந்தித்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பான பதிவு…