;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு கடனுதவி: சர்வதேச நிதியம் நிபந்தனை!

பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு…

பட்டினிச்சாவின் விளிம்பில் 300 மில்லியன் மக்கள்: அதிரவைக்கும் தகவல்

கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்து ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக அதிரவைக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக…

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி

கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் விவசாய நிலங்களை மூழ்கடித்துள்ளது. பேய் ஏரி கடந்த…

சொல்லப் போனால்… டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நேரிட்ட பதற்றமான சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தானும் தன்னுடைய நிர்வாகமும்தான் மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதெல்லாம்…

சிறைச்சாலையில் துளை போட்டு தப்பி ஓடிய 10 கைதிகள் ; அமெரிக்காவில் சம்பவம்

லூசியானா சிறையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பியோடினர். உடந்தையாக இருந்த 3 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள்…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த…

கடும் தட்டுப்பாடு; மழையில் கரைந்த 15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய…

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம்

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் நேற்று (17) இரவு அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.…

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது. சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி…

மட்டக்களப்பில் மினி சூறாவளி ; வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினிசூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…

புலம்பெயர்தல் ஒரு அளவுக்கு மேல் போனால்… சுவிஸ் அரசின் புதிய திட்டம்

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை ஒரு அளவுக்கு மேல் போகும்போது, அதைக் கட்டுப்படுத்தும் உரிமை தங்களுக்கு வேண்டும் என சுவிஸ் அரசு கூறியுள்ளது. ஒரு அளவுக்கு மேல்... இது குறித்து பேசிய சுவிஸ் புலம்பெயர்தலுக்கு பொறுப்பான…

கடலுக்குள் செல்லும் இரணவில கடற்கரை!

புத்தளம் - சிலாபம், இரணவில கடற்கரையின் 700 மீட்டர் பகுதி கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் போதே மேற்படி…

போர் நிறுத்தம் குறித்து புடின் – ஜெலென்ஸ்கியுடன் பேசுவேன்! டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து பேசுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி…

அமெரிக்காவை தாக்கிய புயல்: குறைந்தது 23 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூறையாடிய புயல் காற்று அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில்…

பதினாறாவது மே18முள்ளிவாய்க்கால் கஞ்சி – நினைவுகளைக் கடத்தல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமை அலுவலகம் முன்பாக இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல நூற்றுக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் வாங்கி அருந்திச்…

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 போ் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழையுடன் கடுமையான மின்னலும்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது

உண்மையான நல்லிணக்கம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள்…

ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட…

யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள் ,…

கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக்…

உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த நம் உறவுகளுக்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம்(18) மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக்…

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.…

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க…

இஓஎஸ்-09 செயற்கைக் கோள் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விவசாயம்,…

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா – சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன. இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2035-ஆம்…

உலக நாடுகளுக்கு மீண்டும் கிலியை ஏற்படுத்தியுள்ள கொரோனா ; அச்சத்தில் மக்கள் !

உலக நாடுகளை பெரும் அதளபாதாளத்திற்குள் தள்ளிய கொரோனா வைரஸ் மீண்டும் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல…

யாழில்.119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு

திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்றைய தினம் சனிக்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி

இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி - ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள்…

கடல் வழியாக தாயகம் திரும்பியவர்கள் விளக்கமறியலில்

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகள் இடை…

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித புதைகுழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகள் மழை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால்…

காஸா போர்: கடந்த 2 நாள்களில் 300 பேர் பலி!

காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250…

யாழில் அரச முதியோர் இல்லத்தில் இருந்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழில் அரச முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 71வயதான வயோதிபப்…

வடக்கு , கிழக்கில் 23ஆம் திகதி வரையில் மழை தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும்…