;
Athirady Tamil News

பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலி : சிலி நாட்டில் ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் ரூ.21,294ஆக அதிகரிப்பு!!

0

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஐரோப்பியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தங்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்து இருந்து அங்குள்ள செல்வங்களை எல்லாம் சுரண்டி சென்ற பிரிட்டன் தற்போது பொருளாதார மந்தநிலையால் தள்ளாடி வருகிறது. பிரிட்டனில் 41 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஆண்டு 11.1 % அளவிற்கு விலைவாசி உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதால் பொதுமக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. உணவுப் பொருட்களை பொறுத்தவரை விலை குறைவானவற்றை வாங்கவே பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக அழுகும் நிலையில் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றை வாங்க மக்கள் போட்டிப் போடுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிலி நாட்டில் கடந்த மாதம் 10 பறவை காய்ச்சல் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன. எனவே இறைச்சி, முட்டை சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் தேவையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டை விட முட்டையின் விலை 35% அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது அங்கு 1 முட்டை இந்திய மதிப்பில் ரூ. 21,294க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு பக்கம் பணம் ஈட்ட பல்வேறு முயற்சிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக செல்போன், இணையதளம் மூலம் பணம் ஈட்டவே அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.