;
Athirady Tamil News

பிரபல நடிகை விஜயலட்சுமி கண்ணீர்.. “சீமான் மாமா.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாரும் திட்றாங்க மாமா” !! (PHOTOS, VIDEOS)

0

விஜயலட்சுமி மறுபடியும் ஒரு வீடியோ பதிவிட்டார்.. அந்த வீடியோவில், “சீமான் மாமா, சீமான் மாமா” என்று பேசிக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார்.. என்ன காரணம்?

நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பேயே, சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்று விடாமல் சொல்லி வந்தவர் விஜயலட்சுமி.. இதுதான் அவரது புகார்…

பாலியல் தொல்லை: பாலியல் ரீதியாக தம்மை பயன்படுத்திவிட்டு சீமான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார், தனக்கு துரோகம் செய்துவிட்டார் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீருடன் புலம்பி வந்தவர்.. அத்துடன் சீமானுடன் இருக்கும் சில போட்டோக்களையும், சீமான் தொடர்பான வீடியோக்களையும் விஜயலட்சுமி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.. மற்றொருபக்கம் போலீசிலும் சீமான் மீது விஜயலட்சுமி புகார் தந்திருந்தார்.

இதையடுத்து, விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் சரமாரி விமர்சித்து வருகிறார்கள்.. ஒருகட்டத்தில் திமுக அரசிடமும் சீமான் குறித்த புகாரை கொண்டு சென்றார் விஜயலட்சுமி.. இதுகுறித்து முதல்வரிடமும் கோரிக்கை வைத்து, வீடியோ வெளியிட்டிருந்தார். கர்த்தரின் மறுபிறவி: அதில், “கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும்” என்று நடிகை விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்படி சீமானை தொடர்ந்து விமர்சித்து வந்த விஜயலட்சுமி, தற்போது சீமானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.. 4 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாயிருந்தது. இன்னொரு வீடியோ: அதில், விஜயலட்சுமி பேசும்போது, “சீமானை கைது செய்யவும், அவர் பெயரை களங்கப்படுத்தவும் தான் என்னை ஒரு காயினாக பயன்படுத்துனீங்க… அது நடக்கல என்றதும் என்னை டார்கெட் செய்யாதீங்க… சும்மா சீமானை அம்பலப்படுத்துவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் செருப்பால் அடிப்பேன்… என் சந்தோஷத்தில் மண்ணை அள்ளி போட நினைக்காதீங்க… எனக்கு என்ன பண்ணணுமோ அதை சீமான் பண்ணுவார்.. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பண்ணுவார்கள்… நீங்க உங்க வேலையை பாருங்க..

நான் சீமானை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்.. நான் அவருடன் வாழ்ந்திருக்கிறேன்.. சீமானோட முதல் மனைவி நான்.. அவரை என் மூச்சா பார்க்கிறேன்… இந்த வாரம் பூரா என்ன பண்ண போறேன் தெரியுமா? சீமானின் டயலாக் எல்லாம், நானும் நாம் தமிழர் கட்சியினரும் பேசி பேசி கொண்டாட போறோம்.. அதை பார்த்து பார்த்து நீ ஒப்பாரி வெச்சுக்கோ.. ‘ என்று விஜயலட்சுமி பேசியிருந்தார். உண்மைத்தன்மை: ஆனால், இந்த வீடியோ உண்மை என்று சிலரும், உண்மைத்தன்மை இல்லை என்று சிலரும் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டபடியே இருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசும்போது, “இந்த வீடியோ முழுவதும் நான் சீமான் மாமா-ன்னு சொல்லிதான் பேசப்போறேன்.. ஏன்னா, நான் மாமான்னு சொன்னால்தான், நீங்க யாரை அழ வச்சுட்டு இருக்கீங்கனு அவருக்கு ஞாபகம் வரும்.. நான் நிம்மதியாக தூங்கி 12 வருஷம் ஆயிடுச்சு சீமான் மாமா.

தினம் நான் அழுதுட்டுதான் இருக்கேன்.. உங்களை ரீச் பண்றதுக்குகூட, செல்வத்துக்கிட்ட பேசி, வீடியோவை தந்தேன்.. ரெண்டு வருஷமா நீங்க என் கூட வாழ்ந்தபோது விதவிதமான கனவுகளை என்கிட்ட சொன்னீங்க. விதவிதமான நம்பிக்கை கொடுத்தீங்க. ஆனா திடீர்னு என்னை பைத்தியம் ஆக்கிட்டு, நடுரோட்டுல விட்டுட்டு போய்ட்டீங்க. எனக்கு எப்போ நியாயம் கிடைக்கப் போகுதுனு எல்லோரும் கேக்குறாங்க. சீமான் மாமா: அழுதுட்டேதான் இந்த வீடியோவை பேசிட்டு இருக்கேன்.. கர்நாடக மக்களுக்கு தெரியும் நான் எவ்ளோ கஷ்டப்படறேன்னு.. நான் என் அக்காவை வச்சிட்டு எப்படி கஷ்டப்படுறேனு உங்களுக்கு தெரியும். அவங்களுக்கு என்ன வியாதி இருக்குனும் உங்களுக்கும் தெரியும்.

எத்தனை நாள்தான் நம்ம விஷயத்தை பொதுவெளில அசிங்கப்பட விட்டுட்டே இருக்க போறீங்க? இது பர்சனல் விஷயம்தானே.. இதை நீங்களே பேசி பிரச்சனையை முடிச்சிட்டு போயிருக்கணும் இல்ல? நான் அவமானப்படுறத எத்தனை நாள்தான் நீங்க பார்க்க போறீங்க சீமான் மாமா. 5 லட்சம் கொடுத்து கர்நாடக மக்கள் என்னை காப்பாத்தனாங்க.. வீட்டுக்குள்ள பத்திரமா இருங்கன்னு என்னை சொன்னாங்க.. எனக்கு பண உதவி பண்ணனும்னு தோணுச்சுன்னா, பணம் கொடுங்க. நான் உங்ககூட வாழ்ந்த மனசாட்சி உங்களுக்கு இருந்துச்சுனா எனக்கு உதவுங்க. நான் வேண்டாம்னு சொல்லலையே. கயல்விழி: உங்களுக்கு மனைவி இருக்காங்க.. குழந்தை இருக்கு.. “கயல்விழி மேல பொறாமை கிடையாது” நான் உங்களுக்கு ஒவ்வொரு முறை வீடியோ அனுப்பும் போதும், கயல்விழிய நல்லா பாத்துக்கோங்க. பிரபாகரன் பாப்பாவ நல்லா பாத்துக்கோங்கன்னுதானே சொல்லி இருக்கேன். என்னைக்காவது என் கூட வந்துங்க வாழுங்க மாமானு உங்களை கூப்பிட்டேனா? எனக்கு கயல்விழி மீதெல்லாம் பொறாமை கிடையாது. நீங்க நல்லா வாழனும் நினைக்கிற பொண்ணு நான்.

எந்த அளவுக்கு நான் பொசசிவ் என்பது உங்களுக்கு தெரியும்.. அப்படியிருந்தும்கூட, கயல்விழியை நல்லா பார்த்துக்கோங்கன்னு சொல்லியிருக்கேன்.. அந்த வீடியோவை பார்க்கும்போதுகூட நீங்க என்கிட்ட பேசலையே.. நான் உங்களுக்கு எவ்ளோ விட்டுக்கொடுத்திருக்கேன்.. அசிங்கமா இருக்கு: “ரொம்ப அசிங்கமா இருக்கு”.. எனக்கு வேண்டியது உங்க அன்பு மட்டும்தான். நான் சக்தியை இழந்துட்டேன்… ஏதாவது பண உதவி பண்ணனும்னு நெனச்சா பண்ணுங்க. அது என் அக்காவோட மருத்துவ செலவுக்குதான் நீங்க பண்றீங்க. அதுல எனக்குனு எதுவும் நான் செஞ்சுக்க மாட்டேன். உங்களுக்கு தெரியும், நான் ஒரு வளையல்கூட வாங்கி போட்டுக்குறது கிடையாது.. புகார் கொடுத்தால் ஒருத்தங்க திட்றாங்க.. புகார் கொடுக்கலைன்னா ஒருத்தங்க திட்றாங்க..

அதனால், தயவுசெய்து, என் தங்கச்சி கயல்விழியை நல்லா பார்த்துக்குங்க. இன்னொரு பொண்ணு கண்ணிரில் நான் வாழ மாட்டேன்.. அது உங்களுக்கே தெரியும்.. மாவீரன் பாப்பாவை நல்லா பார்த்துக்குங்க.. ஆனால் என்னை கொச்சைப்படுத்தறாங்களே.. இதை தீர்க்க வேண்டியது உங்க கடமைதானே.. இந்த நம்ம விஷயத்தை நீங்க நினைச்சாதான் தீர்த்து வைக்க முடியும். எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு சீமான் மாமா” என விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.