;
Athirady Tamil News

இறுதி அஞ்சலி செலுத்தியபோது திடீரென விழித்தெழுந்த நபர்.. அலறியடித்து உறவினர்கள் ஓட்டம்!!

0

மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை.

இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். உடனே டாக்டருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார்.

அவர் வந்து மாலையும் கழுத்துமாக அசைவற்று கிடந்த ஜீது பிரஜாபதியை பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று இறந்ததாக நினைத்த நபர் உயிருடன் எழுந்த நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.