;
Athirady Tamil News

சைபர் கிரைமில் 21 லட்சம் புகாரில் 2 சதவீதம் மட்டுமே வழக்குபதிவு- வழக்கை விசாரிக்க போதிய அதிகாரிகள் இல்லை!!

0

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும். குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:- இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை. அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.