;
Athirady Tamil News

நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா!!

0

புதுவை நைனார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் ஓவ்வொரு ஆண்டும் செடல் திருவிழா விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு செடல் திருவிழா நேற்று காலை சக்தி கரக ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடந்து கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அழகப்பன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுந்தரன், உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழா உபயதாரர்கள், ஊர் பிரமுகர்கள் பா.ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர், பொதுச்செயலாளர் விஜயகுமார், கிளைத்தலைவர் மணிகண்டன்,கூட்டுறவு பிரிவு செயற்குழு தலைவர் அசோக் குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான செயல் திருவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்றுமாலை 4.30 மணிக்கு செடல் ஊர்வலமும் மாலை 5 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் பக்தர்கள் செடல் அணிந்து கார், பஸ், டிராக்டர், பொக்லை எந்திரம் போன்ற வற்றை இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்துவார்கள் இக்காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதிவுலா இன்னிசை கச்சேரி மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.