;
Athirady Tamil News

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் – காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி !!

0

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்கூட்டரில் சென்ற ஜோடி காவல்துறை ரோந்தில் இருந்து தப்பிய போது மற்றொரு கார் மீது மோதி உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேற்கு பிரான்ஸின் லிமோஜஸில்(Limoges) இருந்து ஸ்கூட்டரை காவல்துறை அதிகாரிகள் துரத்துவதற்கு முன்பு, அப்பகுதிக்கு வந்த சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை தடுத்து நிறுத்த காவல்துறை அதிகாரிகள் தயாராகி கொண்டிருந்தும் அவர்கள் தப்பிச் சென்று உள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் காவல்துறை அதிகாரிகளின் துரத்தலுக்கு பிடி கொடுக்காமல் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் போக்குவரத்து சிக்னலின் சிவப்பு ஒளியை பொருட்படுத்தாமல் சாலையில் பாய்ந்துள்ளது, அப்போது அங்கிருந்த கார் மீது மோதி ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் மற்றும் வயது வந்த சக பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர்கள் சக்திவாய்ந்த Yamaha TMAX ஸ்கூட்டரில் சென்றதாகவும், சூழ்நிலையின் ஆபத்தை கருதி விரைவாக அவர்களை மடக்கி பிடித்து துரத்தலை முடிக்க நினைத்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் மேல் எங்கள் எண்ணங்கள் உள்ளது என்று லிமோஜஸஸ் மேயர் எமிலி ரோஜர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஜூன் 17ம் திகதி தான் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் நஹெல் கொல்லப்பட்டான். இதனால் பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.