;
Athirady Tamil News

கிறிஸ்தவத்தை பரப்புதல், ஊக்குவித்தல்: 18 என்.ஜி.ஓ.-க்களை பிடித்து வைத்திருக்கும் தலிபான்!!

0

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரத்தில் தலையிட்டு கல்லூரிக்கு பெண்கள் செல்லக் கூடாது, அழகு நிலையத்தில் பணிபுரியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தது. மேலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 18 ஊழியர்களை பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச உதவி பணி என்ற அமைப்பு, “தங்களுடைய 18 ஸ்டாஃப்களை தலிபான் பிடித்து வைத்துள்ளது. மத்திய கோர் மாகாணத்தில் உள்ள இரண்டு என்.ஜி.ஓ. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களை தலிபான் பிடித்துள்ளது. அவர்கள் காபுல் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஸ்டாஃப்களை பிடித்துச் செல்லவதற்கான காரணம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது. ஆப்கான் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. கிறிஸ்தவத்தை பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் உள்ளிட்ட ஸ்டாஃப்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர். இந்த குற்ற்சாட்டுக்கு அமெரிக்கா, என்.ஜி.ஓ. ஆகியவை பதில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த என்.ஜி.ஓ. சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மட்டும் பணியாற்றி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.