;
Athirady Tamil News

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
#################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாஹீர் ருத்ரா அவர்களது முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமமொன்றில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பொருந்தொகையான சிறுவர் சிறுமியர்களோடு அவர்களின் பெற்றோர்களும் மூதாளர்களும் வருகை தந்து விசேட அசைவ மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

புங்குடுதீவு வழித்தோன்றல்களும், சுவிஸ் நாட்டில் பிறந்து வாழ்பவர்களுமான திரு.திருமதி. கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் “செல்வன். சாஹிர் ருத்ரா” அவர்கள் இன்றையதினம் தனது முதலாவது பிறந்ததினத்தை அவரது ஆசையக்கா “செல்வி.இஷாரா” மற்றும் அம்மா, அப்பா, உற்றார் உறவுகளுடன் இணைந்து விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக தாயக உறவுகளுடன் இணைந்து வவுனியா எல்லப்பர் மருதங்குளம் எனுமிடத்தில் தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. இன்றைய தினத்தில் காலையில் இதேயிடத்தில் செல்வன்.சாஹீர் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போது வருகை தந்த அனைத்து பிள்ளைகளும் தங்களது பெற்றோருடன் வருகை தந்த மதிய உணவில் கலந்து கொண்டதுடன் கிராமத்தில் பராமரிப்பின்றி தனித்து வாழும் மூதாளர்களும் செல்வன்.சாஹீர் அவர்களின் பிறந்த நாள் மதிய சிறப்புணவில் கலந்து கொண்டது சிறப்பானதாகும்.

செல்வன் சாஹீர் அவர்களது பிறந்த நாள் இன்றைய தினம் காலை கேக் வெட்டி வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியும் இன்றையநாளில் மதியம் செல்வன்.சாஹீர் அவர்களின் பிறந்தநாளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் இனிய முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் சாஹீர் ருத்ரா கீர்த்தன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிதான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இதற்க்காக நிதிப்பங்களிப்பினை வழங்கிய சுவிஸ்வாழ் தமிருறவான திரு.திருமதி். கீர்த்தன் பிரிணி தம்பதிகளுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மகிழ்வான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.01.2022

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில் தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ)

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.