;
Athirady Tamil News

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

0

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வடடாரத்தை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “பரிமளா” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.குகானந்தவேல் பரிமளாதேவி அவர்களின் அறுபதாவது பிறந்த தினம் இன்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், அமரர் குகானந்தவேல் அவர்களின் துணைவியாருமான கனடாவில் வசிக்கும் “பரிமளா” என அன்புடன் அழைக்கப்படும், திருமதி.குகானந்தவேல் பரிமளாதேவி அவர்களின் அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மகள்களான பிரியா குடும்பம் (லண்டன்), பாமினி குடும்பம் (கனடா), சகோதரரான தம்பி அப்பன் குடும்பம் (சுவிஸ்) ஆகியோரினால் வழங்கப்பட்ட நிதியில் இன்றையதினம் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வவுனியா எல்லைப்புறக் கிராமமான கற்குளம் இரண்டில் உள்ள “மலரும் துளிர்கள்” சனசமூக நிலையாத தலைவர் கணேஷ் எனும் திரு.சிவகணேசன், “மலரும் துளிர்கள்” முன்பள்ளி ஆசிரியை திருமதி.றுவாணி ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இன்றையதினம் திருமதி பரிமளா அவர்களின் அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட உணவு வழங்கவும் உள்ளனர். (அதுகுறித்த செய்திகள் தொடரும்)

இன்றைய நாளில் கனடாவில் தனது அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி குகானந்தவேல் பரிமளாதேவி அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமைக்காகவும், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்குவதுக்கான நிதி பங்களிப்பை வழங்கிய அவரது பிள்ளைகள், மற்றும் அவரது தம்பி ஆகியோருக்கும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

24.03 2022.

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.