;
Athirady Tamil News

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் காற்றின் தரம் பாதிப்பு…!!

0

நாட்டின் தலைநகரான டெல்லி நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. இங்கு அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு பலனும் கிடைத்து வந்தது. இந்தநிலையில் டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று முன்தினம் எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்றின் மாசுபாடு அதிகமாகவே உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் காற்றின் தர குறியீடு 314 ஆக இருந்தது. நேற்று காலை 8 மணிக்கு 341 ஆக இருந்தது.

காற்றின் தரத்தை பெறுத்தவரை தரக்குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-க்குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமானது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது எனவும் கருதப்படுகிறது.

இந்த கணக்கின்படி நேற்று காற்றின் தரம் மோசமாக இருந்தது. தீபாவளியை கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால் இன்று இன்னும் மோசமான நிலைக்கு காற்றின் தரம் செல்லாம் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.