;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய அழகிய நகரம்” திட்டத்திற்கு அமைவாக மோட் நிறுவனத்தின் தலைவர் அருந்தவநாதன் அனோசனின் நிதி அனுசரணையுடன் நாயன்மார்கட்டு குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று காலை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, வேலைத்திட்டம் தொடர்பான பதாதையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன், மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன், மாநகர சபை செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.