;
Athirady Tamil News

50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..! அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

0

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வு இன்று (14.07.2025) செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவாகும் இளையோர் சமுர்த்தி துறையால் நிதியளிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தொழில் கல்வி படிப்புகளை தொடர ரூ. 50, 000 மதிப்புள்ள முழு உதவித்தொகையை பெறுவார்கள்.

சொந்தமாகத் தொழில்
மேலும், தொழில் முனைவில் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு வணிக பயிற்சியும் சொந்தமாகத் தொழில் தொடங்க சலுகை கடன்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் https:// www.nextsrilanka.lk என்ற இணையத் தளத்தை அணுகுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

கிராம மேம்பாடு சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 வருடங்களில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த செயல் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.