;
Athirady Tamil News

இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்..!!

0

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் கூட்டங்கள் அதிக அளவில் நடைபெறும். இது கொரோனா அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதால், அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் கூடுவதை தடை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு டிசம்பர் 25-ந்தேதியில் இருந்து (நாளை மறுதினம்) இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும். திருமண நிகழ்ச்சியில் 200 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.