;
Athirady Tamil News

மலிவான விமானப் பயணம் எளியவருக்கும் சாத்தியமாகி உள்ளது- மத்திய மந்திரி பெருமிதம்..!!

0

மும்பை முதல் அகமதாபாத் வரை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை மந்திரி வி கே சிங்கும் மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி சிந்தியா, முன்பு விமானப் பயணம் மிக உயர் வகுப்பினருக்கானதாக இருந்தது என்றார். இப்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காரணமாக மலிவான விமானப் பயணம் ஏழை எளியவர்க்கும் சாத்தியமாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்றும் உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 425 வழித்தடங்கள், ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் 68 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதன் மூலமாக நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.