;
Athirady Tamil News

உதான் திட்டம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சேலம் விமான நிலையம்..!!

0

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உதான் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு மலிவான விமான சேவைகள் அளிக்க 2017-ல் மத்திய அரசால் உதான் திட்டம் தொடங்கப்பட்டது. 2014-ல் நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. உதான் திட்டத்தின் மூலம் தற்போது இது 141 ஆக அதிகரித்துள்ளது. 58 சிறிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் சேவை வசதி கொண்ட 8 ஹெலிபேர்டுகள், 2 நீர் விமான நிலையங்கள் உதான் திட்டத்தின் மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் 425 புதிய வழித்தடங்களில் விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2022 ஆகஸ்டு வரை 1 கோடிக்கும் அதிகமான விமான பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கின்றனர். 2026-க்குள் உதான் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 220 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ஆயிரம் வழித்தடங்களில் விமான சேவைகள் அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 156 விமான நிலையங்களில் 954 வழித்தடங்களுக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 வழித்தடங்களில் உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் விமான நிலையம் இதன் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குஜராத்தில் 8 விமான நிலையங்களும் 53 வழித்தடங்களும் இதன் மூலம் இயக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.