;
Athirady Tamil News

இன்று பலத்த மழை பெய்யும் பகுதிகள்!!

0

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.