;
Athirady Tamil News

அம்பன் பிங்பொங் விளையாட்டுக்கழகம் அபார வெற்றி…..! (வீடியோ, படங்கள்)

0

குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் முத்தையா தர்மபாலசிங்கம் ஞாபகார்த்த குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2:30 மணியளவில் குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினர் அ.ச.அரியகுமார், சிறப்பு விருந்தினர்களான தலமை கிராம சேவகர் தோமஸ் யூட், குடத்தனை வடக்கு பாடசாலை அதிபர் மு.கதிர்காமநாதன், மற்றும் கௌரவ விருந்தினர்களில் ஒருவரான மணல்காடு பங்குத் தந்தை ஜோன் குருஸ் மற்றும் விருந்தினர்கள் என பலரும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து அம்பன் மேற்கு பிங்பொங் விளையாட்டுக் கழகத்திற்க்கும், அம்பன் கிழக்கு சிவனொளி விளையாட்டுக் கழகத்திற்க்கும் இடையில் இறுதிப்போட்டி இடம் பெற்றது.

இதில் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியதை தொடர்ந்து விளையாட்டுப் போட்டியை நடாத்திய குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகத்திற்க்கும், அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகத்திற்க்கும் இடையில் சவால் கிண்ண போட்டி இடம் பெற்றது.
இதிலும் அம்பன் பிங்க்பொங் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது.

இதில் கருத்துரைகளையும், பரிசில்களையும் பிரதம, சிறப்பு, கௌரவ உறுப்பினர்கள் வழங்கினர்.

குறித்த விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கடந்த மாதம் 20/08/2022 அன்று ஆரம்பமாகியது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட 16 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இதே வேளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் நாகர்கோவில் தெற்கு வெண்மதி விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும், அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றிருந்தன.

இன்றைய இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட விளையாட்டு கழக வீரர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.