;
Athirady Tamil News

சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.!!

0

எதிர்கட்சி வரிசையில் இருக்கின்ற கட்சிகள், 2000 தொழிற்சங்களை கொண்ட ஒன்றியமும், மக்கள் அமைப்புக்களும் என பலர் ஆதரவு வழங்கியுள்ளார்கள். தென்னிலங்கை மாவட்டங்களுக்கு நாம் செல்லும் போது அந்த அமைப்புக்கள் முன்னின்று செய்வார்கள். அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது அவர்களதும் கோரிக்கை. அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த போராட்டத்தின் பலனாக இவை இரண்டையும் அடைவோம் என்ற நம்பிக்கை இருகிறது.

ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலஙகையில் தமிழ் மக்கள்ளுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவது உள்ளடங்களாக அதிகார பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13வது திருத்தத்தை அமுல்படுவத்துவதாக இருந்தாலும் அதனை செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல. அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படி செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைவு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் என கோரியுள்ளோம். எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள் கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.