;
Athirady Tamil News

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்- புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!

0

பிரதமர் மோடி இன்று தொடங்கி 11ந் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோதேராவில் இன்று மாலை நடைபெறும் விழாவில், ரூ 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அப்போது முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமமாக மோதேரா கிராமத்தை பிரதமர் அறிவிக்கிறார்.

பின்னர் மோதேஸ்வரி மாதா கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்துகிறார். நாளை காலை 11 மணியளவில், பருச் உள்ள அமோத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், மாலை ஜாம்நகரில் ரூ.1,460 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.