;
Athirady Tamil News

வில் அம்பு சின்னத்திற்கு தடை- தேர்தல் ஆணையத்திற்கு மூன்று சின்னங்களை அனுப்பியது உத்தவ் தாக்கரே அணி..!!

0

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், சிவசேனா பெயர் மற்றும் அதன் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இரு பிரிவும் தங்கள் அணிக்கு 3 புதிய பெயர்களை சின்னங்களையும் தேர்வு செய்து திங்கட்கிழமைக்குள் (நாளை) தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, இன்று தனது மூன்று விருப்ப சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அதன்படி திரிசூலம், உதய சூரியன் மற்றும் எரியும் ஜோதி ஆகியவற்றுள் ஒன்றை புதிய சின்னமாக தேர்வு செய்து விரும்புவதாக கூறப்பட்டுள்ளது அதேபோல் தமது அணிக்கு சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா பிரபோதங்கர் தாக்கரே மற்றும் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய மூன்று பெயர்களையும் பரிந்துரை செய்த தேர்தல் ஆணையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. வில் அம்பு சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது என்று கூறி உள்ள உத்தவ் தாக்கரே, தனது கட்சிக்கான சின்னத்தையும் பெயரையும் விரைவில் இறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார். மக்களிடம் சென்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.