;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது!! ( படங்கள் இணைப்பு )

0

சில மாதங்களுக்கு முன்பு தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றிருந்தன . இத்தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தனர் . ஆனாலும் ஆண்கள் அணியினர் பாடசாலைக்குரிய சீருடையில்லாது கழகமொன்றின் சீருடையினை அணிந்தே விளையாடி வெற்றி பெற்றிருந்தனர் .அதேபோன்று பெண்கள் அணியினரும் உத்தியோகபூர்வ சீருடையின்றியே விளையாடி வலயமட்டத்தில் முதலாமிடத்தையும் , மாகாணமட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் தட்டிச்சென்றிருந்ததோடு எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட தொடருக்கும் தகுதிபெற்றிருந்தனர் .

இந்நிலையில் புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் விளையாட்டு துறைப்பிரிவான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் ( Pungudutheevu United Sports Club ) 80 000 ரூபாய் பெறுமதிமிக்க சீருடைகள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளன . புங்குடுதீவு உலக மையத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் , சமூக ஆர்வலர் சுதர்சன் ( லக்சன் ) மற்றும் ஆசிரியர்கள் , மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் மேற்படி சீருடை கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

மேற்படி பாடசாலைக்கான விளையாட்டு சீரூடைகள் மூன்றாவது தடவையாக புங்குடுதீவு உலகமையத்தினரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . புங்குடுதீவிலுள்ள அனைத்து வட்டாரங்களையும் , விளையாட்டு கழகங்களையும் ஒருங்கிணைத்து தேசிய ரீதியில் பிரகாசிக்கும் தொழில்சார் விளையாட்டு வீரர்களாக உருவாக்கவேண்டும் என்னும் ஒரே நோக்கில் 2013 ம் ஆண்டில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.