;
Athirady Tamil News

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரெயில்களில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை சரிவு..!!

0

நாடு முழுவதும் கடந்த 2021-22-ம் ஆண்டில் பயணம் செய்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் வெறும் 5.5 கோடி மூத்த குடிமக்களே ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேநேரம் இது 2019-20-ம் ஆண்டில் 7.2 கோடியாகவும், 2018-19-ம் ஆண்டில் 7.1 கோடியாகவும் இருந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நிலவிய 2020-21-ம் ஆண்டில் சுமார் 1.9 கோடி மூத்த குடிமக்களே ரெயில்களை நாடியுள்ளனர். கடந்த 2021-22-ம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு கொரோனா அச்சுறுத்தல்தான் காரணம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ரெயில்வே ரத்து செய்ததும் இந்த காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.