;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

0

யாழ் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக, வனவள திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் யாழ்மாவட்டச் செயலகத்திலகத்தில் இடம்பெற்றது.

நேற்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்குமான பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் மெய்நிகர்வழியாக கொழும்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஆரம்பம் முதலே ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் யாழ்மாவட்ட செயலகத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் எவரும் இக் கலந்துரையாடல் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டனர்.

வனவள தினைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் இன்றைய தினம் களவிஜயம் ஒன்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.