;
Athirady Tamil News

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத் தளங்கள்!!

0

தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய நிலைப்பாட்டை எதிர்கொள்ள, பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிற்கு அதன் இராணுவ தளங்களுக்கு விரிவாக்கப்பட்ட அணுகலை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக சி.என்.என். செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையில் 2014 ஆம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் மேலும் நான்கு இடங்களுக்கு அமெரிக்கா அணுகலை வழங்கும். இது பிலிப்பைன்ஸ் முழுவதும் மொத்தம் ஒன்பது தளங்களுக்கு துருப்புக்களை நிலை நிறுத்த உதவுகிறது.

சமீப காலமாக பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விருப்பங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியாட் ஆஸ்டின் குறிப்பிடுகையில், அமெரிக்காவும் பிலிப்பைன்ஸும் ஆயுதமேந்திய தாக்குதலை எதிர்க்கும் பரஸ்பர திறன்களை வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

இது இருதரப்பு கூட்டணியை நவீனமயமாக்குவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதி. மேலும் சீன மக்கள் குடியரசு மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் அதன் சட்டவிரோத உரிமைகோரல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் இந்த முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என்று ஆஸ்டின் கூறினார்.

இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் உயர்மட்ட அமெரிக்க இராணுவ ஒப்பந்தங்களை தொடர்ந்து, இந்தியாவுடன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்கள் மற்றும் ஜப்பானிய தீவுகளுக்கு புதிய அமெரிக்க கடற்படை பிரிவுகளை நிலைநிறுத்துவதற்கான திட்டங்கள் உட்பட பல முக்கிய நகர்வுகளை அமெரிக்க முன்னெடுத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.