;
Athirady Tamil News

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரியதா?

0

MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கப்பல்களில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு உடனடி உதவிகளை வழங்குமாறு இலங்கை கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக நாட்டிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்த சேதத்தையும் இழப்பீடுகளையும் கோரவில்லை, மேலும் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு என்ற கருத்துக்கு ஏற்ப இந்திய அரசு கப்பல்களை மிக விரைவாக அனுப்பியது, என இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா;

“.. MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவை ஊடகங்களின் பிழை அல்ல. அரசில் உள்ள அமைச்சர்களே இதனை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

Express Pearl கப்பலுக்கான நட்டத்தினை முறையாக வசூலிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இரண்டு வருடங்கள் அதனை தாமதித்தனர். எமக்கு சந்தேகம் நிலவியதன் காரணமாக சிங்கப்பூரில் வழக்குத்தாக்கல் செய்தனர். ஆனால் இப்போது தெரிய வருகிறது என்னவென்றால் வழக்குத் தாக்கல் செய்த நீதிமன்றமும் பிழை என்று.. பிறிதொரு நீதிமன்றுக்கு மாற்ற வேண்டுமாம். இறுதிக் கட்டத்தில் உள்ளோம்..”

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டயமண்ட் கப்பலும் ஆபத்தில் சிக்கிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடந்த 22ம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.