;
Athirady Tamil News

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் அதிரடி விழிப்புணர்வு!!

0

கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா நாட்டின் சுகாதார அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் கூறியதாவது:- புகையிலை பயன்பாடு கனடாவின் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இது, நோய் மற்றும் அகால மரணத்தைத் தடுக்கக்கூடிய நாட்டின் முன்னணி காரணமாகவும் அமைந்துள்ளது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகையிலைக்கு எதிராக எச்சரிக்கை வாசக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்து, உலகின் முதல் நாடாக கனடா திகழ்கிறது. 2035ம் ஆண்டிற்குள் புகையிலை நுகர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட வேண்டும் என்ற கனடாவின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும். புகையிலை தயாரிப்பு கட்டுகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் ஏப்ரல் 2024ம் ஆண்டு இறுதிக்குள் புதிய எச்சரிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். கிங் சைஸ் சிகரெட்டுகளில் ஜூலை 2024 இறுதிக்குள் தனிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வழக்கமான அளவிலான சிகரெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகள் ஏப்ரல் 2025 இறுதிக்குள் எச்சரிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.