;
Athirady Tamil News

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி அறிவிப்பு!!

0

ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.

மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.