நாவலனின் கொடுப்பனவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதானம்
புங்குடுதீவு -நயினாதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் நினைவு தினத்தை (30-12-2025) முன்னிட்டு தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியிலும் , ஏற்பாட்டிலும் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 2018 ம் ஆண்டு தொடக்கம் வேலணை பிரதேச சபை உறுப்பினராக செயற்படுகின்ற திரு . கருணாகரன் நாவலன் அவர்கள் தனக்குரிய மாதாந்த கொடுப்பனவுகளை இடைவிடாது தொடர்ச்சியாக பொதுநலன் செயற்பாடுகளுக்காக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



