;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1517482.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!

0

பயாகல எலகஹவத்த புகையிரத கடவையில் பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) பிற்பகல் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை அமைப்பை சீர் செய்யாமையால் இவ்வாறு பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.