சந்நிதியான் கொடியேற்றம் – அதிகாலையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேறியது
;
கொடியேற்ற தினத்தின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று , எதிர்வரும் 26ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.