கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் : ரணிலை சந்தித்தார் சம்பிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டிற்கு ஒரு படி’ என்ற பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுக்கும் ஐக்கிய குடியரசு கட்சி முன்னணி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு செய்ய வேண்டிய பங்களிப்புகள்
இந்த கூட்டு மனிதாபிமான கூட்டணியின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு செய்ய வேண்டிய பங்களிப்புகள் குறித்து உரையாடலின் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுத் தலைவர் கரு பரணவிதான, சிரேஷ்ட உப தலைவர் சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, இளைஞர் பிரிவுத் தலைவர் திக்சன் கம்மன்பில ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.