யாழ் பல்கலையின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவது தவறு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி பல்வேறு ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை நிலையங்களினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இலட்சினையானது வியாபார நோக்கில் உரிய அனுமதிகள் எவையுமின்றி பொதுவெளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய குற்றமொன்றாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையானது பல்கலைக்கழக மூதவையின் (Senate) அனுமதியுடனே உபயோகிக்கப்படுதல் வேண்டும். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
மேலதிக விபரங்களிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,தபால் பெட்டி எண் 57, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரி ஊடாகவும் தொலைபேசி : 021 221 8100, மின்னஞ்சல் : [email protected] வாயிலாகவும் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.