;
Athirady Tamil News

தேர்தல் தொடர்பாக ரணிலின் உறுதி: மனோ கணேசன் பகிரங்கம்

0

தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல் முறை சீர்திருத்தம் எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது இவ்விவகாரம் புதிய நாடாளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும்.

அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்து உரையாடுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்
தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது.

இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில் தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பட்டை அரசாங்கம் காட்ட முயல்கிறது. இது பச்சை பொய் அத்தோடு பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம்.

அரசியலமைப்பு
மேலும் அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம் சட்டத்தை திருத்தி, விகிதாசார முறையில் மாகாணசபைகள் தேர்தல்களை நடத்துவது என்பதாகும்.

அதையும்கூட அரசாங்கம் செய்யவில்லை இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள் மற்றும் பிறகு இப்போது வேண்டாம் என்றும் இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் அதிபரை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார்.

அதேபோல் சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்த போது அவரும் இதையே எனக்கு தெரிவித்த நிலையில் இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.

உள்ளக மாற்றங்கள்
இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.

எனவே எமது மக்களை பாதிக்கும் எந்தவொரு அடாத்தான மற்றும் தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம்.

விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களை பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம் அத்தோடு இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும்.

மேலும் எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும் போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்” என அவர் தெரவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.