மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: புத்தாண்டை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படவுள்ள 20 கிலோ அரிசி
இலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு 27.5 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
காப்புறுதி அல்லது ஏனைய சலுகைகள் பெறாத குடும்பங்களுக்கே இந்த அரிசி வழங்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் களு ஆராச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
பிராந்திய அபிவிருத்திக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்குள் 24 லட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.