பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது.
ஈரானில் இருந்தும் ஈரானுக்குள்ளும் சனிக்கிழமை வரையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில்லை என்றே லுஃப்தான்சா அறிவித்துள்ளது.
ஏப்ரல் 13ம் திகதி சனிக்கிழமை வரையில் ஈரானுக்கு அல்லது ஈரானில் இருந்து எந்த முன்னெடுக்கப்படாது எனவும், விரிவான ஆய்வுக்கு பின்னரே இந்த முடிவெடுத்துள்ளதாகவும் லுஃப்தான்சா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை
இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கா உளவுத்துறை அந்த நாட்டை எச்சரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஈரான் பதிலடி அளிக்கும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அது நேரடியாகவோ ஹவுதிகள் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புகளாலோ ஈரான் முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதை முதல் முதலில் கணித்து வெளியிட்டதும் அமெரிக்க உளவுத்துறை தான்.
மொஸ்கோ தாக்குதல்
அண்மையில் மொஸ்கோ மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலும் முன்னரே எச்சரிக்கை விடுத்ததும் அமெரிக்கா தான். தற்போது ஈரான் பதிலடிக்கு தயாராகி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமாத்திரமன்றி, முதன்மை தளபதி ஒருவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.