;
Athirady Tamil News

பொது மயானம் இன்றி பெரும் அல்லலுறும் மன்னார் மக்கள்

0

மன்னார் மாவட்டத்தின், நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கடும் மழையால் இறுதிச்சடங்கினை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

யுத்த காலத்திற்கு முன்னர் இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொது மயானம் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதன் காரணமாக மக்கள் பொது மயானம் இன்றி ஆங்காங்கே சில இடங்களில் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் நாகதாழ்வு கிராமத்தில் இடம்பெற்ற மரண சடங்கு கடும் மழையின் காரணமாக கஸ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

தமக்கு நிரந்தரமான ஒரு பொது மயானத்தை நிரந்தரமாக வழங்குமாறும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.