;
Athirady Tamil News

சில மணி நேரம்தான், இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள் ; இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்

0

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் “சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீனா மீது இரண்டாம் கட்ட வரிகளை அறிவிக்க போவதாக ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியா, சீனா, ரஷ்யாவை ஓரணியில் நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31 மோடியின் சீனா பயணமும், விரைவில் புதின் இந்தியா வரவிருப்பதும் இதற்கு அச்சாரம் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.