;
Athirady Tamil News

வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றார் ரணில் விக்ரமசிங்க

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிற்சை பிரிவிலிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது கையில் புத்தகம் ஒன்றையும் ரணில் விக்கிரமசிங்க வைத்திருந்தார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எழுதிய Unleashed என்ற‌ புத்தகமே அதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.