;
Athirady Tamil News

மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

0

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவா் இயக்கத்துடன் தொடா்புடைய கனோ அதிகாா் பரிஷத் அமைப்பின் தலைவா் நூருல் ஹக் நூா் மற்றும் ஆதரவாளா்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

டாக்காவில் உள்ள புரானா பல்டான் பகுதியில் உள்ள ஜாதிய கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளா் சந்திப்பு நடத்த நூருல் ஹக் நூா் முயன்றபோது, அதை நிறுத்தி அங்கிருந்து அகலுமாறு காவல்துறையினா் கோரிக்கை விடுத்தனா்.

அது அலட்சியம் செய்யப்பட்டதால் ராணுவமும் காவல்துறையும் கூட்டத்தினா் மீது தாக்குதல் நடத்தின. இதில் பலத்த காயமடைந்த நூா் (படம்) மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.இந்த வன்முறையை ஜனநாயக இயக்கத்தின் மீதான தாக்குதலாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதியளித்துள்ளது. கலீதா ஜியா தலைமையிலான பிஎன்பி உள்ளிட்ட பல கட்சிகளும் இந்தத் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.