;
Athirady Tamil News

ஈரான் போரினால் லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

0

ஈரான் போர் காரணமாக நாட்டுக்குள் பொருட்களின் விநியோகம் தடைபடுவதால், லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

நாம் காண்பது வெறும் இடப்பெயர்வு நெருக்கடி மட்டுமல்ல. அது மிக வேகமாக உணவுப் பாதுகாப்பு நெருக்கடியாக மாறி வருவதாக பெய்ரூட்டிலிருந்து காணொளி மூலம் கூறிய உலக உணவுத் திட்ட பணிப்பாளர் கூறியுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களிடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக உணவைப் பெற்றுக்கொள்வது பெரும் கடினமாக மாறி வருகிறது எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக லெபனான் இருமுனை நெருக்கடியை எதிர்கொள்கிறது. லெபனான் , தெற்கில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட சந்தைகள் செயற்படவில்லை கூறப்படுவதுடன், பல வர்த்தகர்கள் ஒரு வாரத்துக்கும் குறைவான அத்தியாவசிய உணவுப் பொருட்களே கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.