;
Athirady Tamil News

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள்

0

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ள நிலையில் தனது அமைச்சரவை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய மந்திரி பதவிகளை வழங்கியுள்ளார்.

கனிஷ்கா நாராயண், இங்கிலாந்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுடன் இணைந்து ஏ.ஐ. தொடர்பான பணிகளை இவர் கவனிப்பார்.

சத்வீர் கவுர், சமத்துவத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் சமத்துவம் தொடர்பான பணிகளை கவனிப்பார். ஹர்பிரீத் உப்பல், தொழிலாளர் கட்சியின் உதவிக் கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் விதிமுறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் இவர் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.