;
Athirady Tamil News

யாழில் காணாமல்போன மீனவர்கள்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

0

யாழில் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தொடர்பில் தீடுதல் வடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு தகவல் கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, அமைச்சர் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகத்திடம் தொடர்புகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை நாடுகளின் கடற்பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல்போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படவேண்டும் என கடற்படையினருக்கும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.