;
Athirady Tamil News

நான்கு புலம்பெயர் பணியாளர்களை தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள்

0

வெளிநாடொன்றில், நான்கு புலம்பெயர் பணியாளர்களை வேனுக்குள் வைத்து தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தீப்பற்றி எரிந்த வேன்
நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில், இத்தாலி நாட்டிலுள்ள Amendolara என்னுமிடத்துக்கு அருகில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் வேன் ஒன்று தீப்பற்றி எரிவதாக தீயணைப்புத்துறையினருக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில், காருக்குள் எரிந்த நிலையில் நான்கு உடல்கள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

பொலிசார் சிசிடிவி காட்சிகளை சோதனையிடும்போது, ஒருவர் அந்த வேனுக்குள் பெட்ரோலை ஊற்றி தீவைக்க, மற்றொருவர் வேனிலிருந்தவர்கள் தப்பமுடியாத வகையில் வேன் கதவுகளை வெளியிலிருந்தவண்ணம் மூடி பிடித்துக்கொள்வதும் சிசிடிவி காட்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அந்த வேனில் ஆப்கன் நாட்டவர்கள் நான்கு பேரும் பாகிஸ்தானியர் ஒருவரும் இருந்துள்ளார்கள். தீவைக்கப்பட்டபின் ஆப்கன் நாட்டவர் ஒருவர் கதவு கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

வேனில் பயணித்தவர்கள் புலம்பெயர் பணியாளர்கள் என்றும், வேன் மீது தீவைத்தவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்கள் பணம் தொடர்பில் எழுந்த சண்டையில் வேனுக்கு தீவைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

வேனுக்கு தீவைத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.