;
Athirady Tamil News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0

ஜப்பானின் தெற்கு பகுதிகளில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவான கையுஷுவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் அலைகள் 1 மீட்டர் அல்லது 3.28 அடி உயரத்துக்கு எழும்பும் என்றும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி அலைகள் எழத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்டுகிறது.

குமாமோடோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுஓகா, சாகா, ஒய்டா, மியாசகி பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜூன் 25ல் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (ஜூன் 25) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டோக்கியோ, ஹாஷிகாமி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்ல.

ஜப்பான் மட்டும் ஏன்?

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையத்தின்’ (Ring of Fire) மேற்கு விளிம்பில் உள்ள நான்கு முக்கிய புவித்தட்டுகள் (tectonic plates) சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால்தான் உலகின் நிலநடுக்க பாதிப்புகளை அதிகம் சக்திக்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மையானதாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.