;
Athirady Tamil News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதலாம் பகுதி வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை தொடர்பான மேலதிக அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மூலம் அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை நிலைய விபரங்கள் தொடர்பான தகவல்கள் உரிய காலத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.